சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதியை ஊக்குவிக்கும் சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாமா என்று கேட்டது.

அந்த சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருந்து ஜாதிப் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், சங்கத்தின் பெயரிலிருந்து ஜாதி பெயரை நீக்கி, சங்க சட்டத்தில் திருத்தம் செய்து அரசை அணுக மனுதாரர் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.