வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தமிழக கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நாளை (டிசம்பர் 13) தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.