திண்டுக்கல்: இந்தியாவின் தெற்கு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வட தமிழ்நாட்டில் சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக கொடைக்கானலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திண்டுக்கல் கலெக்டர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.