சென்னை: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கான இழப்பை ஈடுகட்டும் வகையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.