சென்னை: நீங்கள் அலுவலகம் செல்லும் பெண்ணா? உங்கள் தொழில்முறைக்கு ஏற்ற சரியான ஆடையை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்களா? ஏனென்றால், முறையான ஆடைகள் உங்களது மரியாதையை அலுவலகத்தில் அதிகப் படுத்துவதோடு உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகப்படுத்தும். இந்த பதிவில் தொழில்முறை ஆடைகளை தேர்வு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில், உங்கள் பட்ஜெட்டை வகுத்துக் கொள்ளுங்கள். இது நீங்கள் சரியான பொருட்களை, சரியாக தேர்வு செய்து உங்கள் தேவைக்கேற்ப வாங்க உதவும். இந்த வகையில், அலுவலாக முறையான ஆடைகள் பல விலை ரகங்களில் கிடைகின்றன. உங்கள் பட்ஜெட் என்னவென்று நீங்கள் நிர்ணயித்துக் கொண்டால், அதற்கு ஏற்றவாறு வாங்க திட்டமிடலாம்.
இணையதளத்தில் பல வகை ஆடைகள், பல விலைகளில் கிடைத்தாலும், உங்களால் ஓரளவிற்கு மட்டுமே அதனை யூகிக்க முடியும். குறிப்பாக ஒரு ஆடையின் நிறம் மற்றும் அந்த துணியின் தரம் மற்றும் வகை, நீங்கள் கணினியில் பார்பதற்கும் நேரில் உங்களுக்கு வந்த பிறகு பார்பதற்கும் பல வேறுபாடுகள் ஏற்படக் கூடும். இதனால் உங்கள் எதிர்பார்ப்புகளும் பாதிக்கப்படலாம்.
மேலும் சில தருணங்களில் நீங்கள் ஏமாற்றம் அடையும் சூழலும் ஏற்படலாம். அதனால் முடிந்த வரை, இதற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கடைகளுக்கு நேராக சென்று உங்களுக்குத் தேவையான அலுவலக ஆடைகளை வாங்குவது சிறந்தது.
ஆடையின் நிறம் ஒருவரின் தகுதியை மற்றும் வெளிதோற்றத்தை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக உங்களது அலுவலக ஆடைகளை நீங்கள் தேர்வு செய்யும் போது வெளிர் நிற சட்டைகள், அடர் நிற பாண்ட்டுகள், அதிகம் டிசைன்கள் இல்லாமல், பார்பதற்கு கண்களுக்கு எதுவாக இருக்கும் ஒரு ஆடையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அலுவலகத்தில் எந்த விதமான நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஒரு ஆடையை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக பல நிறுவனங்களில் வார இறுதியில் அனைவரும் காசுவல் ஆடைகளில் வர அனுமதிப்பார்கள். அதனால், பெண்கள், சுடிதார், புடவை போன்ற இயல்பான ஆடைகளில் வருவார்கள். அது போன்றே உங்கள் அலுவலகத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்க இருந்தால், அதற்கு தகுந்தார் போல முக்கியத்துவம் கொடுத்து நல்ல தொழில்முறை ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.