சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: நான் முதல்வன் திட்டம் தமிழக அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது, இதன் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பொருத்தமான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறதா என்பதில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், பயிற்சி பெற்றால் இளைஞர்கள் எந்தெந்தத் துறைகளில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைகளைப் பெற முடியும் என்பதைக் கண்டறிந்து, தகுதிவாய்ந்த நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.