மதுரை: 2019-ம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மதுரையுடன் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் மதுரையில் இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் 5-வது மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிடக் கோரி திரு.பாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
அதில், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது? கடந்த 5 வருடங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும், எப்போது முடிவடையும்? ” என்று மத்திய அரசிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, கொரோனா தொற்று காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும்; 2025-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “2022-க்குள் கொரோனா முடிந்துவிட்டது; தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடையும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.