சென்னை: ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி-தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவருடன் சென்ற ஆண் மாணவர்களும் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும் குற்றவாளியைப் பிடித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து ஐஐடி மெட்ராஸுக்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்கு வெளியே உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு ஐஐடி மெட்ராஸுடன் எந்த தொடர்பும் இல்லை. ஐஐடி மெட்ராஸ் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வளாகத்திற்குள் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் ஐஐடி மெட்ராஸ் வழங்குகிறது.”