சென்னை: அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: நேற்று மாலையில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 0830 மணிக்கு அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தீவிரமடைந்துள்ளது.
இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவடைந்து அக்டோபர் 03-ம் தேதி காலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் கடக்கும். 01-10-2025: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

02-10-2025: வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸாகவும் இருக்க வாய்ப்புள்ளது.