திண்டிவனம்: தொடர் கனமழை காரணமாக கிடங்கல் ஏரி நிரம்பியதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திண்டிவனத்தில் கிடங்கல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கிடங்கல் ஏரி நிரம்பியதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அத்தியாவாசிகள் தேவையான பொருட்கள் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த கிடங்கல் ஏரியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்தது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும் மேலும் மழைநீர் வீடுகளுக்குள் வராமல் இருக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.