சென்னை: ‘தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏற்படும் பல்வேறு வகையான செலவுகளுக்கு உரிய வருமான வரி விலக்கு (டி.டி.எஸ்.) குறித்து வழக்கமான தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை. வருமான வரித்துறை சோதனை என்ற செய்தி தவறானது’ என மின்வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏற்படும் பல்வேறு வகையான செலவுகளுக்கு உரிய வருமான வரி விலக்கு (டிடிஎஸ்) தொடர்பாக இன்று வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் வழக்கமான தணிக்கை நடைபெறுகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை. எனவே, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படவில்லை. வருமான வரித்துறை சோதனை என்ற செய்தி தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.