புதுடெல்லி: கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.5 உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஆண்டிற்கு 422 உயர்த்தியது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று கூடி, கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை வரும் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ. 422 ரூபாய் உயர்த்தியது.
இதனால், 2025-ல் கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 12,100. பட்ஜெட்டில் இதற்காக ரூ. 855 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொப்பரை தேங்காய் அரைக்கும் விலையும் ரூ. 422 அதிகரித்து ரூ. 11,582 உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்தியாவில் கொப்பரை சீசன் பொதுவாக ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும்.