வேலூர்: வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு உள்ளூர் நீர்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கொச்சி, கேரளாவின் கோழிக்கோடு, கர்நாடகாவின் மங்களூர், கார்வார் ஆகிய பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த விற்பனையும், காலை 6 மணிக்கு மேல் சில்லரை வியாபாரமும் நடக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனையாகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 70 முதல் 100 டன் மீன்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விற்பனை அமோகமாக இருந்தது. மீன் வரத்து குறைவாக இருந்தாலும் விற்பனை அதிகமாகவே இருந்தது.

மேலும் விலையும் சிறிதளவு அதிகரித்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று 5 லோடு மீன்கள் மட்டுமே வந்தன. அதன்படி, ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.30 வரை விற்பனையானது. 1,300, சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ ரூ. 650, அயிலை ரூ. 170, ஒரு கிலோ இறால் ரூ. 400, ஒரு கிலோ நண்டு ரூ. 350-450, ஒரு கிலோ சங்கரா ரூ. 350, ஒரு கிலோ ஷீலா ரூ. 350, வெள்ளை கொடுவா கிலோ ரூ. 400, கண்ணாடி பாறை கிலோ ரூ. 450, ஒரு கிலோ இறால் ரூ. 500, கடல் மட்டை ஒரு கிலோ ரூ. 750, அணை மட்டை ஒரு கிலோ ரூ. 180, சுறா கிலோ ரூ. 700, தேங்காய் பாறை கிலோ ரூ. 400, நெத்திலி ரூ. 250, மற்றும் மத்தி ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் வரத்து குறைந்துள்ளது. உள்ளூர் பகுதியில் தேவை அதிகரித்துள்ளதால், அங்கிருந்து குறைந்தளவு பொருட்கள் வந்துள்ளன. கடந்த வாரத்தை விட இந்த வாரமும் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்.