கோவை: பாஜக தேசிய மகளிர் முன்னணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:- பாகிஸ்தான் இந்தியாவை நேரடியாக எதிர்கொள்ளாமல் பயங்கரவாதிகளை ஏவி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால், இந்தியாவில் பாஜக எதிரிகள், பாஜகவையும் பிரதமர் மோடியையும் எதிர்ப்பதாக நினைத்து, இந்தியாவையும் இந்திய ராணுவத்தையும் அவமதித்து வருகின்றனர்.

இந்திய ராணுவம் தனது உயிரை பணயம் வைத்துப் போராடுவதும், இழிவான முறையில் பேசுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா ஒருபோதும் போரை விரும்பியதில்லை. அப்பாவி பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. 140 கோடி மக்களைப் பாதுகாக்க எல்லையில் இந்திய வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள்.
இந்த நேரத்தில், நாட்டு மக்கள் அனைவரும் அரசியல், மதம், சாதி, மொழி, இனம் போன்ற அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.