சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:- பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகள் நிலங்கள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு புகார்கள் மீது அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதற்கு ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் பதில் அளிக்க வேண்டும்.
ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தின் மீதான குற்றவியல் மற்றும் சட்டப்பூர்வ புகார்களை முழுமையாக விசாரித்து உண்மைகளை தெரிவிக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.