புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுவதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்குக் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பலத்த மேற்பரப்பு காற்று மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
30ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழகம், புதுவை, காரைக்காலில் 31ம் தேதி முதல் 03ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° – 37° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° – 28° செல்சியஸாகவும் இருக்கும்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°- 37° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°- 28° செல்சியஸாகவும் இருக்கும்.