சென்னை: சென்னையில் நேற்று நடந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் தலைசிறந்த தலைவர் கருணாநிதி. தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் தனது அரசியல் ஆளுமையை நாடு முழுவதும் விரிவுபடுத்தினார். தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டவர். தனது அரசியல் பயணத்தில் 5 முறை முதல்வராக பதவி வகித்து ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபட்டார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு திட்டங்களையும் அவர் செயல்படுத்தினார். அவர் ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்த முயன்றார். சுதந்திர தினத்தன்று, மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்ற அனுமதி பெற்றனர். தொடர்ந்து, முதல் முதலமைச்சராக, 1974ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, தேசியக் கொடியை ஏற்றினார்.ஜனநாயக தத்துவத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். மத்தியில் நிலையான ஆட்சி அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகளை வழிநடத்தினார். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தபோது, அந்த அரசை ஆதரிப்பதில் முக்கியப் பங்காற்றிய கருணாநிதியின் பணி இதற்கு நல்ல உதாரணம்.
மக்களுடன் எவ்வாறு ஆழமாக தொடர்பு கொள்வது என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் கருணாநிதியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கவிதை, தமிழ் இலக்கியம் மற்றும் சினிமாவிலும் சிறந்து விளங்கினார். அத்தகைய தலைவரின் நினைவு நாணயத்தை வெளியிட வாய்ப்பு அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, தங்கம் தன்னரசு, ஏ.வி.வேலு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா, பாமக சட்டப் பேரவைத் தலைவர் ஜி.கே.மணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன். கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கருணாநிதி குறித்த சிறப்பு காணொளி திரையிடப்பட்டது. ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக நேற்று மாலை கடலோர காவல்படை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்த ராஜ்நாத்சிங்கை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், முதல்வர் ஸ்டாலின், ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அதில், ராஜ்நாத் சிங், கருணாநிதியுடன் அமர்ந்திருந்தபடி செல்ஃபி எடுத்தார்.
கருணாநிதிக்கு பிரதமர் மோடி பாராட்டு: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி, பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல், இலக்கியம், சமூகப்பணி என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய தலைவராக இருந்த கருணாநிதி. தமிழகத்தின் வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். அவர் பன்முகத்தன்மை கொண்டவர் மற்றும் அவரது எழுத்துக்கள் மூலம் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கியத் திறமை அவரது படைப்புகளின் மூலம் பிரகாசித்தது மற்றும் அவருக்கு ‘கலைஞர்’ என்ற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
இந்த நாணயம் அவரது கொள்கைகளை, அவரது படைப்புகளை என்றென்றும் நமக்கு நினைவூட்டும். கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும் சிந்தனைகளும் நமது தேசத்தின் பயணத்தை தொடர்ந்து வடிவமைக்கும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
செயல்தலைவர் ஸ்டாலின் நன்றி: நாணய வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது மனமார்ந்த நன்றியை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.