கரூர்: கரூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று (ஆகஸ்ட் 14) பொறுப்பேற்ற கே.பேரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகஸ்ட் 8ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர்.கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கே.பிரபாகர் திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கே.பெரோஸ்கான் அப்துல்லாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கே.பெரோஸ்கான் அப்துல்லா இன்று (ஆகஸ்ட் 14) கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது பேசிய கே.பெரோஸ்கான் அப்துல்லா கூறியதாவது: பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும். குற்றச்செயல்களை தடுக்க அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் குற்றங்கள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, புகார்கள் மீது முழு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே நட்புறவு பேணப்படும். கஞ்சா, குட்கா, சூதாட்டம் போன்ற போதைப் பொருட்கள் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் அச்சமின்றி காவல் நிலையங்களை அணுகலாம். காவல் நிலையங்களில் குறைகள் இருப்பின் உயர் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 94421 49290 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு பெரோஸ்கான் அப்துல்லா கூறினார்.