திண்டுக்கல்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பில் தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிபதி மற்றும் முதலமைச்சர் போன்றோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட போது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவத்திற்கு பிறகு, உயர்நீதிமன்றம் விஜய்யை கடுமையாக கண்டித்தது. நீதிபதி செந்தில் குமாரின் கருத்துகள் தவெகவினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். காவல்துறையும் தீவிரமாக தேடல் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரையும் தேடி வருகின்றனர்.
தற்போது, திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக மாவட்ட நிர்வாகிகளின் தொடர்ந்து நடத்தும் தலைமறைவு நடவடிக்கைகள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.