சென்னை: மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது… கசகசாவில் மூளைக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், இரும்பு, காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. இது நரம்பு செல்களை தூண்டி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
கசகசாவை மாதுளம் பழச்சாற்றில் ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும். கொத்தமல்லியுடன் ஐந்து கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். கசகசாவில் அதிக அளவு காப்பர் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்தும்.
கசகசாவை தேங்காய் பாலில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் குணமாகும். கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் அனைத்தையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால், ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
கசகசாவை முள்ளங்கி சாற்றில் ஊற வைத்து, அரைத்து தேமல், படை, படர்தாமரை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால், அவை விரைவில் குணமடையும்.
கசகசா, ஓமம், மாம்பருப்பு, மாதுளை, சுண்டைக்காய் தலா 50 கிராம் எடுத்து அரைத்து, இதில் 5 கிராம் எடுத்து கெட்டி தயிர் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான பேதியும் உடனே நிற்கும். கசகசா, முந்திரிப் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து, முகத்தை தடவி வந்தால், முகப்பரு மறையும். முகம் அழகு பெறும்.
கசகசா, மிளகு, மிளகாய் மூன்றையும் பொன்னாங்கண்ணி கீரையில் போட்டு கடைந்து சாப்பிட்டால், கண் பார்வை கூர்மை அடையும்.