நாமக்கல்: தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரித்தால் ரூ.45 ஆயிரம் கோடி கிடைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார். நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டதா, இல்லை என, பட்ஜெட்டில், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை, மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.
ஆனால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. அதில் கலந்து கொண்டு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை விளக்கி, நிதி ஒதுக்கீடு கேட்டால் மட்டுமே தமிழகம் பயன்பெற முடியும். வெள்ளை அறிக்கை… தமிழகத்திற்கு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி கோரப்பட்டுள்ளது, மத்திய பட்ஜெட்டில் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நிதிநிலை அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 3வது இடத்தில் பாஜக வெற்றி பெற்றது. அதற்காக தமிழகத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. தமிழகத்தை 3 மாநிலங்களாகப் பிரித்தால் மாநிலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், ரூ.45 ஆயிரம் கோடியும் கிடைக்கும். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார்.