புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே தமிழக பகுதியான வாழப்பட்டாபாளையம் கிராமத்தில் ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ திருக்கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கோவில் திருப்பணிகள் ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் நிறைவடைந்தது. இதனை அடுத்துகோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து விழாவின் முன்னதாகஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம்,முதல் கால யாக பூஜை ஹோமம் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்துஇரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும்நான்காவது கால யாக பூஜை, ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், மகாபூர்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து கலசகங்கள் கோபுரங்களுக்கு ஊற்றப்பட்டுஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவினை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் வாழப்பட்டாம்பாளையம் கிராமவாசிகள் வெகு சிறப்பான முறையில் செய்திருந்தனர்.