கோவை: கடந்த சில நாட்களுக்கு முன் கோவை அருகே ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை கொன்று ஒரு ஆட்டை தின்று கொன்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவியது. சிறுத்தையை பொறி வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் ஆடுகளை தேடி சிறுத்தை வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், நேற்று இரவு 11.35 மணியளவில் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் புகுந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையை ‘ட்ராப் நெட்’ மூலம் பிடித்து கூண்டில் அடைத்தனர். மிரட்டி வந்த சிறுத்தைப்புலி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.