சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு சுயஉதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக தமிழக அரசு ரூ.3.45 கோடியை விடுவித்துள்ளது. இது தொடர்பாக மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பழங்குடியினர், நலிவடைந்தோர் மற்றும் திருநங்கைகள் அடங்கிய 23 சிறப்பு சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.23 லட்சம், 227 முதியோர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.27 கோடி, 95 மாற்றுத்திறனாளி சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.95 லட்சம் என மொத்தம் 345 சிறப்பு சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.45 கோடி வாழ்வாதார நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் வாழ்வாதார நிதியை நாம் முறையாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.