நெல்லை: நெல்லை, தென்காசிக்கு இன்று (ஏப்.11) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கும், காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் இன்று (ஏப்.11) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேவேளையில் இன்று நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு (அறிவியல்) எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும்.