சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வலது தோள்பட்டையில் வைக்கப்பட்டிருந்த தட்டு அகற்றப்படுவதற்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் வைகோவுக்கு வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின், பிளேட் வைக்கப்பட்டிருந்தது தற்போது அவர் பிளேட்டை அகற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைகோ கால் தடுமாறி கீழே விழுந்து தோள்பட்டையில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு உடல்நிலை தேறி வீடு திரும்பினார். வைகோவின் இடது தோள்பட்டையில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதை சரிசெய்ய டைட்டானியம் தட்டு வைக்கப்பட்டது.
அப்போது வைகோவின் மகன் துரைவைகோ கூறியதாவது: 40 நாட்கள் ஓய்வு எடுத்தால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை இயல்பு நிலைக்கு திரும்பும். தற்போது வைகோவின் வலது தோள்பட்டையில் வைக்கப்பட்டிருந்த பிளேடை அகற்ற மீண்டும் மருத்துவ சிகிச்சை கிடைத்துள்ளது, அவருக்கு சிகிச்சை தொடர்கிறது.