சென்னை: “மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்புகிறது” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், “நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் அவசர அவசரமாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக அறிவிக்கப்பட வேண்டும்,” என்றார்.
இந்த மனுவை விசாரித்த ஆர்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் பெஞ்ச், “புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும் முன் சட்ட ஆணையத்திடம் கருத்து கேட்க வேண்டும். இந்த சட்டங்கள் மக்களை குழப்பும் வகையில் உள்ளது” என்றும், இந்த மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.