சென்னை: பாஜக நிர்வாகியும், நடிகையுமான குட்டி பத்மினி மீதான மோசடி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை மடிப்பாக்கத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள நிலத்தை அபுபாஷா மனைவி இம்ரானாவுக்கு விற்றதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குட்டி பத்மினி மீது 2011-ம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை குட்டி பத்மினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.புகார்தாரர் நிலத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், சட்ட உரிமை தொடர்பான வழக்கை குற்றமாக்க முடியாது.