மதுரை: மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 28 முதல் மே 15 வரை நடைபெற உள்ளது.இந்த சித்திரை திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருவதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் குவிந்த நிலையில், இந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என மாநகராட்சி மதிப்பிட்டுள்ளது. இந்த சித்திரை திருவிழாவை காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவதால், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை வழங்க உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விடுமுறையை ஈடுகட்ட பிற்பகலில் ஒரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.