சென்னை : கோடை விடுமுறையை மாணவ, மாணவிகள் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை வழங்கி உள்ளார்
கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக, தண்ணீர் அதிகம் பருகுங்கள் சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள் அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள் திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
தற்போது மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தங்களின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இனிவரும் நாட்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.