தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தஞ்சாவூர் நகரம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீடு மற்றும் அளவீட்டு முகாம் நடந்தது.
தஞ்சாவூர் நகரம் வட்டளை மையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீடு மற்றும் அளவீட்டு முகாம் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்கள்.
தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட உதவி திட்ட அலுவலர் மாரிமுத்து, மாகட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா மற்றும் மாமன்ற உறுப்பினர் சுகந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இம்முகாமில் கண் மருத்துவர் பிரபா காது மூக்கு தொண்டை மருத்துவர் கவிதா, விஷ்ணு, மனநல மருத்துவர் புவனேஸ்வரி, கண் பரிசோதகர் அண்ணாதுரை மற்றும் காது பரிசோதகர் ஜெனிபர் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறன் மாணவர்களை மதிப்பீடு செய்து அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய அடையாள அட்டைகளுக்கு பரிந்துரைத்தனர். மேலும் அலிம்கோ நிறுவனத்திலிருந்து கலந்து கொண்டு 99 நபர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரைத்தனர்.
இம்முகாமினை வட்டார வள மேற்பார்வையாளர் ஜென்னட்ஷோபா, ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.