பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஏ.சி.எஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், பல், கண், காது, மூக்கு, தொண்டை, நீரிழிவு, இதயம், தோல் நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன.