திருப்பூர் : தென்னம்பாளையம் தெற்கு உழவர்சந்தையில் உள்ள தினசரி சந்தை, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வடக்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சீசன் காலங்களில் பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாவட்டத்தின் குண்டடம், தாராபுரம், அவினாசிபாளையம், அல்லாளபுரம், தெக்கலூர், கருவலூர், மூலனுர், ஓலபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.80 முதல் ரூ. 200 விலை வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தென்னம்பாளையம் அருகே நொய்யல் ஆற்றில் விற்பனையாகாமல் தேங்கி இருந்த தக்காளியை வியாபாரிகள் கொட்டி சென்றனர். இவை நொய்யல் ஆற்றில் மிதந்து சுமார் 2 கி.மீ. தேவையை விட வரத்து அதிகரித்துள்ளதால், சில விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காததால், அறுவடை கட்டணம் மற்றும் சந்தைக்கு கொண்டு வருவதற்கான வாகன வாடகையை கருத்தில் கொண்டு, தக்காளியை பறிக்காமல் விட்டு வருகின்றனர்.
சந்தைக்கு கொண்டு வரப்படும் தக்காளி முழுமையாக விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால், தக்காளிகள் குப்பையிலும், நொய்யல் ஆற்றிலும் கொட்டப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.