
திருச்சி: அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசு வழங்கும் விழா திருச்சி இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து அன்பில் மகேஷ் கிராமத்தில் நடந்த தேசிய சேவை திட்ட முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அன்பில் அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “தேசிய சேவை திட்டத்தை (என்.எஸ்.எஸ்.,) இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

பள்ளி மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், நண்பர்கள் சந்தேகங்களை போக்க உதவ வேண்டும். அவர்கள் படிக்கும் பாடங்கள் மற்றும் அவர்களின் தேர்வில் வெற்றி பெற உதவுங்கள்.”