ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் வளத்துறை சார்பில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மனோஜ் தங்கராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு, அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டி:- ஆவின் மூலம் பால் மற்றும் பால் துணைப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது, 36 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
உரிய நேரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.