கோவை: கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- கடன் தொகை கோவை மாவட்டத்தில் 1973 சுயஉதவி குழுக்களுக்கு 170 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சாதனைத் திட்டங்கள் பெண்களை மையப்படுத்தியே இருக்கும். கடந்த ஆண்டுகளை போல், வரும் ஆண்டுகளிலும் கூடுதல் மின்சாரம் தேவை என, டெண்டர் கோரப்பட்டு, மின்சாரம் கொள்முதல் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கோடை காலத்தில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. சீரான முறையில் மின்சாரம் விநியோகிக்க மின்சார வாரியம் தயாராக உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஏற்கனவே ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை முழுமையாக முடிந்த பிறகு இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பேன்.

இன்னும் சில இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. அவர் பதவியில் இருந்ததில்லை. அவர் தெளிவான முடிவில் இருந்ததில்லை. தெளிவான கருத்துக்களை அவர் முன்வைத்ததில்லை. தமிழக அரசு மக்களுக்கானது, அனைவருக்கும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக செந்தில் பாலாஜி தங்கம் மற்றும் திருமண நிதியுதவியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 352 பயனாளிகளுக்கு ரூ.3.74 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், எம்பி கணபதி ராஜ்குமார், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்து விளங்கிய 12 மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.