10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் பிப்., 13-ல் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 2022 முதல் 2024 வரை ரூ. 500 கோடி பெறப்பட்டுள்ளது.
தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கையால் இந்த தொகை கிடைத்துள்ளது. அதைக் கொண்டு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், பணம் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் பாடங்களையோ, தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையோ சொல்லிக் கொடுக்கலாம்.
![](https://vivegamnews.com/wp-content/uploads/2025/02/23-6.png)
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் பிப்.,13-ல் சென்னையில் நடக்க உள்ளது. இதில் துறை இயக்குனர்கள், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கின்றனர். எந்தவித முறைப்பாடுகளுக்கும் இடமளிக்காத வகையில் பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.