மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தமிழ் மொழியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் தொழில்நுட்ப கருவிகள், பயன்பாடுகள் மற்றும் மென்பொருளை உருவாக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே ‘பாஷினி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து வாரணாசியில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம்-2’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பேச்சு ‘பாஷினி’ ஆப் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ‘பாஷினி’ திட்டக்குழுவின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் நாக் தலைமையிலான குழுவினர், சமீபத்தில் சென்னையில் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்தனர்.
இதில், தமிழக அரசுக்கும், பாஷினி திட்டக் குழுவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவது, தமிழ் ஆன்லைன் கல்விக் கழகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டது.
இது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள பதிவில், ‘செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ் மொழியை மேம்படுத்தவும், டிஜிட்டல் உலகில் தமிழ் மொழியை பரவலாக விரிவுபடுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பாஷினியுடன் இணைந்து செயல்படுகிறோம்.