சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 5 நாள் இடைவேளைக்கு பிறகு நேற்று காலை கூடியது. அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-
மும்மொழிக் கொள்கை வெளியீடு, கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதி ஆகியவை மத்திய அரசால் வழங்கப்படவில்லை. ஜிஎஸ்டி நிதி முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு கல்வி நிதி வழங்க மறுக்கிறது. ஜிஎஸ்டியில் நிதியின் பங்கு நமக்கு 29 பைசா மட்டுமே. இதையெல்லாம் கேட்பதில் அதிமுக என்றைக்குமே ஆர்வம் இருந்ததில்லை.

புதிய மாஸ்டர்களின் உத்தரவுப்படி அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். பொன்முடி முதல்வரிடம் எழுத்து மூலமாகவும், நேரிலும் தான் செய்தது தவறு என்று கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.