பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 67-வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்பட்டது.
தி.மு.க. சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், டில்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், நவாஸ்கனி எம்.பி., முன்னாள் எம்.பி., பவானிராஜேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், தமிழரசி, முத்துராஜா, கிருஷ்ணசாமி உட்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இமானுவேல் சேகரன் குறித்து அவரது பேரன் செல்சியா ரமேஷ்குமார் எழுதிய ‘டைம்லெஸ் டேப்ஸ்ட்ரி’ என்ற ஆங்கில புத்தகத்தை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார்.
முன்னதாக இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபா ராணி, பேரன், பேத்திகள் அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்களை வரவேற்று மணிமண்டபம் கட்டி தனது பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தீண்டாமை ஒழிப்பு, சமூக விடுதலைக்காக போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று. நாட்டுக்காகவும், எழுச்சிக்காகவும் பாடுபட்ட அவரது உயிரைப் போற்றுவோம்.
தாழ்த்தப்பட்டவர்களின் தொண்டு சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை நோக்கிய நமது பயணத்திற்கு உரமாக இருக்கட்டும்.