கோவை: அமர்ந்த நிலையில் தாய் யானை உயிரிழந்தது. குட்டியை யானைக் கூட்டத்தோடு சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
வலசையின் போது கோவை மாவட்டம் தடாகத்தில் தோட்டத்திற்குள் புகுந்த 14 யானைகள் கொண்ட கூட்டத்தை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிய போது ஒரு மாதமே ஆன குட்டி தனியாக பிரிந்தது.
தாய் யானையை தேடிச் சென்ற போது பன்னிமடை காப்புக்காட்டில் அமர்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, ஒரு யானைக் கூட்டத்தோடு குட்டியை விட்ட போது அந்த கூட்டம் ஏற்க மறுத்ததாகவும், கண்டறியப்பட்டுள்ள மேலும் 2 யானைக் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.