2021-க்கு முன்பு, சென்னை மாநகராட்சியில் 704 பூங்காக்கள் மற்றும் 610 விளையாட்டு அரங்குகள் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில், ரூ. 81 கோடி செலவில் 204 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ. 24 கோடி செலவில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தற்போது 908 பூங்காக்கள் மற்றும் 724 விளையாட்டு அரங்குகள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.

கூடுதலாக, ரூ. 8 கோடி செலவில் 32 புதிய பூங்காக்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2025-26 நிதியாண்டில், ரூ. 60 கோடி செலவில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், ரூ. 30 கோடி செலவில் 200-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளன.