நாகை: நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் தனியார் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தொடங்கிய செரியாபாணி என்ற கப்பல் போக்குவரத்து ஒரு சில நாட்களிலேயே புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் தொடங்கிய போக்குவரத்தை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்த 44 பயணிகளுடன் புறப்பட்ட சிவகங்கை என்ற பெயருடைய கப்பல் 4 மணி நேரத்தில் காங்கேசன் துறைமுகத்தை சென்று அடையும்.