சென்னை: பள்ளிக் கல்வி இயக்குனரகம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கான தகுதியான கண்காணிப்பாளர்களின் பெயர் பட்டியல் 15.3.2025 அன்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், இந்தப் பட்டியலைத் தங்கள் எல்லைக்குட்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர்களின் கையொப்பம் பெற்று மாவட்ட அளவில் கோப்பைப் பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நேர்முக உதவியாளர் பணிக்கான பதவி உயர்வு ஆணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.