சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுயஉதவி குழுக்களின் இயற்கை பஜார் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நகர்ப்புறங்களில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயற்கை பஜார் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம், இயற்கை பஜார் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்.
இந்த இயற்கைச் சந்தையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஓலைப் பொருட்கள் போன்றவை கிடைக்கும். மேலும், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட சுவையான உணவுப் பொருட்கள் இயற்கை சந்தையில் கிடைக்கும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இயற்கைச் சந்தைக்குச் சென்று மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கி மகிழுமாறு அன்புடன் அழைக்கிறேன்.