சென்னை: இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குநர் பிரக்யா எம்.சிங் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:- சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டங்கள் 2025-26 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகள் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் கொடுக்கப்பட்டுள்ள அறிமுகப் பக்கங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் கூடுதல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் தங்கள் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த அனுபவ கற்றல், திறன் அடிப்படையிலான மதிப்பீடுகள் மற்றும் இடைநிலை அணுகுமுறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். புதிய பாடத்திட்டத்தை https://cbseacademic.nic.in/curriculum_2026.html என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.