நாகை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்காள விரிகுடாவில் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திலிருந்து கிழக்கே 310 கிலோ மீட்டர் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இதனையடுத்து நாகை, எண்ணூர், கடலூர் மற்றும் புதுச்சேரி உள்பட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.