கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்குக் கூட மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் நேற்று மதியத்தில் இருந்து மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும் தலைமை மருத்துவர் ஹரிப்பிரியா இரவு ஒன்பதரை மணிக்கு வந்ததாகவும் சிகிச்சை பெற வந்த சிலர் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்படுபவர்களை செவிலியர்களே வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை மருத்துவர் ஹரிப்பிரியாவிடம் கேட்டபோது, தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் வீட்டுக்குச் சென்றதாக கூறினார்.