தமிழகத்தில் அக்டோபர் 16 முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல அணைகள் தங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் கேரளா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை அறிக்கை படி, அக்டோபர் 22-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த சில நாட்களில், வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மற்றும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று வானிலை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.