சென்னை: அகவிலைப்படி உயர்வை முன்னிட்டு பத்திரப் பதிவு அலுவலகங்கள் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மங்களகரமான நாட்களில் அசையா சொத்துக்களை ஆவணப் பதிவு செய்ய பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 3ம் தேதி பொது விடுமுறையான சனிக்கிழமை (நாளை) ஆவணங்களை பதிவு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.எனவே பதிவு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்படும்.
இதுகுறித்து அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் ஆவணப் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.